அம்பலாங்கொடை- கந்தேவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரரான தம்மிக்க நிரோஷன் உயிரிழந்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அணியின் தலைவராக அவர் செயற்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், தற்போது அவர் வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்க மானவடுவின் சீடன் என பொலிஸார் தெரிவித்தனர்.
தம்மிக்க நிரோஷன் அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
42 வயதான தம்மிக்க நிரோஷன், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
அவர் அண்மையில் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்ட தம்மிக்க நிரோஷன், இதற்கு முன்னர் குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட தம்மிக்க நிரோஷனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.