அனுராதபுரம், ருவன்வெலி மஹா சேய பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உடமல்வ பொலிஸின் ருவன்வெலி மஹா சேய உப பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் புலங்குளம வத்தை பிரதேசத்தை சேர்ந்த ஜயதிலக என்ற 55 வயதுடைய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ருவன்வெலி சேய பொலிஸ் நிலையத்தின் கடமைகளை பொறுப்பேற்ற இந்த சார்ஜன்ட் இன்று (11) காலை பொலிஸ் தடுப்பு காவல் அரணில் இரத்த வெள்ளத்தில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இது தற்கொலையா? அல்லது கொலையா என்ற கோணங்களில் உடமல்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.