முகத்தில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நிவித்திகலை, வட்டாபொத்த, யொஹூன் கிராமத்தில் உள்ள இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஒத்தையடி பாதையில் இருந்து நேற்று (08) நிவித்திகல பொலிஸார் சடலத்தை கண்டு பிடித்துள்ளனர்.
வட்டாபொத்த, யொஹூன் கிராமம் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவரின் தாயார் வட்டபொத்த விகாரைக்கு அருகில் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதோடு, சம்பவத்தன்று சிறுமி பாடசாலைக்கு செல்லாததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமியை விற்பனை நிலையத்திற்கு வருமாறு தாய் தொலைபேசி அழைப்பொன்றை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விற்பனை நிலையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், தாய் வீட்டுக்கு ஒத்தையடி பாதை வழியாக சென்ற போதுஇ மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது, இறப்பர் மரத்தில் வெட்டப்பட்ட இறப்பர் மரத்தின் கிளை சிறுமியின் மீது விழுந்ததில் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…