அக்குரணை நகருக்கு அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் இன்று (05) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த கட்டடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், அதற்கு அருகில் இருந்த வர்த்தக நிலையங்களிலும் தீ பரவியுள்ளது.
தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் மாத்தளை – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.