ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியில் கூட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 49 வீதத்தை மாத்திரமே வேறொரு நிறுவனத்திற்கு வழங்க முடியுமெனவும் அதற்காக இதுவரை எவரும் முன்வரவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
பாரிய நட்டத்தை சந்தித்து வரும் மத்தளை விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் ரஷ்ய – இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்தியாவின் 69 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.