சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த க்ரீம் பாவனையால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் வைத்தியர் இந்திரா கஹவிட்ட தெரிவித்துள்ளார்.
சுகாதார அபிவிருத்தி பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.