இந்தியா – உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 134 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.மத நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த மத நிகழ்வை நடத்திய போலே பாபா என்பவர் தலைமறைவாகி உள்ளதுடன், அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.