லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபெல்கன்ஸ் அணிகள் மோதின.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி ஃபெல்கன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் சார்பில் சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்த நிலையில் 199 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கண்டி ஃபெல்கன்ஸ் அணி 15.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
பந்துவீச்சில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் சார்பில் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…
திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தை…
லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால்…
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல்…