Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (02) காலை பதற்ற நிலை ஏற்பட்டது.

அதன் பிரகாரம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் நீதிமன்ற வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து அகற்றப்பட்டு விசேட தேடுதல் பணி ஆரம்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில, பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share: