எதிர்காலத்தில் வாகன புகை பரிசோதனை சான்றிதழை வழங்கும் இடத்திலேயே வாகன காப்புறுதி உரிமம் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
வாகன புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கும் போதே மற்ற சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதியை பெறுவதற்காக போக்குவரத்து இராஜாங்க அரமச்சர் லசந்த அலகியவன்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.