கொழும்பு மாவட்டத்தின் நீர் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், நீர் விநியோகம் சீரடைந்தாலும், அதிக தேவை இருக்கும் போது, தற்காலிகமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (17) காலை ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் கார் ஒன்று குடிநீர் குழாயில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.