வவுனியாவில் நேற்றிரவு சிறிய அளவான நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இலங்கையின் புவிசரிதவியல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நில அதிர்வானது, வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில், 2.3 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இதனால் மனித பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.