Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதற்சுற்றின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை குவித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் நிக்கலெஸ் பூரன் அதிகபட்சமாக 98 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதற்கமைய, 219 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும ்இழந்து 114 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் இப்ராஹிம் சத்ரன் அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்ற நிலையில் பந்து வீச்சில் Obed McCoy மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Share: