இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.கவின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு விஜயவாடாவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு செந்தில் தொண்டமான் இதன்போது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.
இதன்போது, இலங்கையில் பெருந்தோட்ட சமூகத்தின் 200 ஆவது ஆண்டு நினைவு முத்திரையையும் செந்தில் தொண்டமானால் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.