பிபில, 3 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (1) பிபில – மஹியங்கனை வீதியின் வேகம பகுதியில் தனியார் பேருந்தொன்றும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பிபில, மஹியங்கனை வீதி, வேகம பகுதியை சேர்ந்த 72 வயதான ராஜேந்திர ராஜகருணா, 69 வயதான உடுவக்க வடுகே கல்யாணி மற்றும் உடுவக்க வடுகே குசும் லலிதா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேனில் பயணித்த மேலும் மூவர் மற்றும் பேருந்தில் இருந்த இருவர் படுகாயமடைந்து பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.