Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி- நுணாவில் பகுதியில் டிப்பருடன் மோதுண்டு ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (12) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் வீதியில் நடந்து சென்ற குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருணாகலை சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share: