Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நாட்டில் கணினி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு கணினி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 05 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட ஐந்தில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐந்தில் மூன்று பேருக்கு டிஜிட்டல் கல்வியறிவு உள்ளதுடன் இது 63.5 சதவீதமாக உள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் மேல்மாகாணம் அதிக கணினி அறிவைப் பெற்றுள்ள அதேவேளை கிழக்கு மாகாணம் மிகக் குறைந்த கணினி அறிவைக் கொண்டுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டளவில், கணினி கல்வியறிவு 4.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது மற்றும் நகர்ப்புறங்களில் கணினி கல்வியறிவு 52.9 சதவிகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share: