தனியார் பேருந்து ஒன்றும் டொல்பின் ரக வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (11) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேனின் சாரதியும் பயணித்த மற்றுமொருவரும் படுகாயமடைந்து கினிகத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன – தியகல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
அதிவேகமாக பயணித்த வேன் சறுக்கி எதிர்திசையில் வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.