ஐஸ்லாந்து நாட்டின் புதிய மற்றும் 2-வது பெண் ஜனாதிபதியாக ஹல்லா தோமஸ் டோட்டிர் (Halla Tomasdottir) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ்லாந்து நாட்டில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் பெண் தொழிலதிபரான ஹல்லா டோமஸ் டோட்டிர் மற்றும் முன்னாள் பிரதமர் கேத்ரின் ஐாகோப்ஸ்டோட்டிர் போட்டியிட்டனர்.
55 வயதான ஹல்லா தோமஸ் டோட்டிர் 34.3 சதவீத வாக்குகளும்,48 வயதான ஜாகோப்ஸ்டோட்டிர் 25.5 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
இதனையடுத்து ஹல்லா தோமஸ் டோட்டிர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன் ,அவர் ஐஸ்லாந்து நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 1980 ம் ஆண்டில் விக்டிஸ் பின்னபோகாடோட்டிர் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.