முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் நேற்று(10) வெள்ளிக்கிழமை புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம்.எம்.முஸாரப், ஹஜ் மற்றும் உம்ரா குழுத் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களும், வகுப் சபை உறுப்பினர்கள், ஹிந்து, கிறிஸ்தவ சமய திணைக்கள உத்தியோகத்தர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட இந்த இணையத்தளத்தை முஸ்லிம் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசல் அவர்களின் முயற்சியினால் உருவாக்க முடிந்ததுடன் உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ். அலா அஹமட், என். நிலூபர், கணக்காளர் நிப்றாஸ் ஆகியோரும் இதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டுள்ளனர்.
இந்தப் புதிய இணையதளத்தின் மூலமாக பள்ளிவாசல்கள் , ஸியாரங்கள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரஸாக்கள், அஹதிய்யா பாடசாலைகள், ஹஜ், உம்ரா, வீசா சம்பந்தமான தகவல்கள் மற்றும் சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.
அமைச்சின் கீழுள்ள அனைத்து திணைக்களத்தையும் கணினி மயப்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டும் என்ற கெளரவ அமைச்சர் விதுர விக்ரம நாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்புதிய இணையதளத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை அழுத்துவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள…
கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…