Categories: Sports News

இரண்டாவது முறையாக தகர்க்கப்பட்ட IPL சாதனைகள்

ஐபிஎல் போட்டித் தொடரின் பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக இது சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற இவ்வருட ஐபிஎல் தொடரின் 8 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஹைதராபாத் அணி 277 ஓட்டங்களை பெற்றதே அதிகபட்ச ஓட்டங்களாக காணப்பட்டது.

இந்நிலையில் தனது சொந்த சாதனையை முறியடித்து ஹைதராபாத் அணி மீண்டும் சாதனை படைந்தது.

துடுப்பாட்டத்தில் சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி சார்ப்பில் விளையாடிய டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 102 ஓட்டங்களையும் கிளாசன் 31 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

288 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் அதிரடியாக போட்டியை ஆரம்பித்தனர்.

எவ்வாறாயினும் ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 262 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

துடுப்பாட்டத்தில் ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணி சார்ப்பில் தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ஓட்டங்களையும் அணித்தலைவர் டு பிளஸிஸ் 28 பந்துகளில் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த போட்டியில் மேலும் பல சாதனைகள் தகர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனப்படையில் இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து 38 சிக்ஸர்களை விளாசி, அதிக சிக்ஸர் அடித்த ஐபிஎல் போட்டி என்ற சாதனையை சமன் செய்தது.

இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற சன்ரைஸஸ் ஹைத்ரபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி இந்த போட்டியில் 22 சிக்ஸர்கள் அடித்துடன் இதன்மூலம் ஒரு அணிக்கு எதிராக மற்றுமொரு அணி அடித்த அதிக சிக்ஸர்கள் என்ற ஐபிஎல் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து மொத்தம் 549 ஓட்டங்களை எடுத்திருந்ததுடன் ஐபிஎல் போட்டி ஒன்றில் மட்டுமல்லாமல் ரி20 போட்டி ஒன்றில் இரு அணிகளும் இணைந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

அத்துடன் இந்த போட்டியில் 2 அணிகளும் சேர்ந்து 43 பவுண்டரிகள் 38 சிக்ஸர்கள் என மொத்தமாக 81 பவுண்டரிகள் அடித்தன.

இதன் வாயிலாக அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்ட ரி20 போட்டி என்ற உலக சாதனையையும் இப்போட்டி சமன் செய்துள்ளது.

இதற்கு முன் 2023 ஆம் ஆண்டில் சென்சூரியனில் மேற்கிந்திய தீவுகள் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியிலும் 81 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago