Categories: Local News

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் மக்களிடம் கையளிப்பு

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நிர்மானப் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த முழுமையான திட்டத்திற்கு 5,278,081,272.43 ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்ட மிகவும் பரபரப்பான வர்த்தக நகரமான கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள புகையிரத கடவையின் காரணமாக நாளாந்தம் 03 மணித்தியாலங்கள் விரயமாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மாக பொறியியல் (Maga Engineering) நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர். டபிள்யூ. ஆர்.பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சமிந்த அதலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

7 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

9 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago