2024 ஆம் ஆண்டில், பெண்ணொருவர் உலகில் எங்கும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கக்கூடிய சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை இடம்பிடித்துள்ளது.
உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்கள் மற்றும் உணவு, கலாச்சாரம் மற்றும் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மதிப்புரைகளை வழங்கும் timeout இணையத்தளத்தால் இந்தச் சான்றிதழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பலான பெண்கள் தனியாக வெளிநாடு செல்வதற்கு ஆசைப்படுவதாகவும், பெண்கள் தனியாகச் செல்லும் பயணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்படி, தனியாகப் பயணிப்பவர்களுக்கான இடங்களைக் கருத்தில் கொள்ளும்போது, பாதுகாப்பான தங்குமிடம், நன்கு நிறுவப்பட்ட சாலைகள், நாட்டின் மக்கள் மற்றும் சமூக தொடர்பு, அத்துடன் ஓய்வு நேரத்தை செலவிடும் திறன் போன்ற காரணிகள் கருதப்படுகின்றன.
இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய நாடான இலங்கை, தெற்காசியாவில் வசீகரமான நாடாக timeout இணையத்தளத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தனியாக சுற்றுலா செல்லும் பெண்களுக்கான சிறந்த இடமாக இலங்கை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அறுகம்பே, மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ ஆகிய இடங்கள் பெண் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற கடற்கரைகள் என பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கைக்குப் பிறகு, போர்த்துக்கல், செக் குடியரசு, ஜப்பான், க்வாத்தமாலா, வியட்நாம், அவுஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தனியாக சுற்றுலா செல்லும் பெண்களுக்கு உகந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…