சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(21) நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதில், சபாநாயகருக்கெதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு முரணாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆட்சேபனையை சபாநாயகர் புறக்கணித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அத்துடன், ஆளுங்கட்சியின் தேவைக்கேற்ப குறித்த சரத்துகளை நிறைவேற்ற, சபாநாயகர் இடமளித்ததாக குற்றஞ்சாட்டி ஐக்கிய மக்கள் சக்தி இந்த அவநம்பிக்கை பிரேரணையை முன்வைத்ததுடன், அதற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்திருந்தன.
முன்னதாக குறித்த பிரேரணையை இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட போதிலும் அது மூன்று நாட்களாக நீடிக்கப்பட்டது.
கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…
திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தை…
லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால்…
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல்…