Categories: Local News

AI தொழிநுட்பத்தை பாடசாலை கல்வியில் உள்வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்வி அமைச்சு – மைக்ரோசொப்ட் நிறுவனம் கைசாத்து..!!

தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கைசாத்திடப்பட்டது.

20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த

தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அவசியமான நவீன வகுப்பறைகளையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்குவதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

அதன்படி கல்விச் செயற்பாடுகளை தொழில்நுட்ப முறையில் முன்னெடுப்பதற்கான உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குழுவொன்று வழங்கவுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது, பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம், மைக்ரோசொப்ட் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவர் புனித் சந்தோக் (Mr. Puneet chandok), புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கும் ஆதரவிற்கும் வழிகாட்டலுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், இலங்கை மக்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்றும் அதனால், அனைவரும் முழுமையான பயனடைய வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்கு சுயாதீன குழுக்களின் ஆதரவை பெற்றுத்தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தர்மசிறி குமாரதுங்க மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு, கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, முஸ்லிம் பெண்கள் பாடசாலை, புஸ்ஸல்லாவ இந்து தேசிய பாடசாலை, தங்கல்ல பெண்கள் கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Muhamed Hasil

Recent Posts

ஜனாதிபதியின் யாழ்ப்பாண கூட்டத்திற்கு வேறு மாவட்டங்களிலிருந்து பஸ்களில் ஆட்களை அழைத்து வந்துள்ளதாக விமர்சனம்.

கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…

1 week ago

திருகோணமலையில் எத்தனை வேட்பாளர்கள் இருந்தாலும் MS தௌபீக் இற்கு மக்களின் பலத்த ஆதரவு…செல்லுமிடம் எங்கும்அமோக வரவேற்பு…

திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தை…

1 week ago

மாணிக்கக்கல் வர்த்தகர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை

லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார்…

1 week ago

பொதுத் தேர்தல்: மை பூசும் விரலில் மாற்றம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

1 week ago

அனைத்தும் மக்களை ஏமாற்றும் நாடகம்.

இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால்…

2 weeks ago

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு தான் எங்கள் போராட்டம் ஆரம்பமாகும் என ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல்…

2 weeks ago