இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பங்களாதேஷின் சட்டோகிராம் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியில் சார்பில் ஜனித் லியனகே சதம் கடந்து 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் டஸ்கின் அஹமட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தநிலையில் 236 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 40.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.
இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 எனும் அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…