தனது இரு பிள்ளைகளையும் படுகொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்க்க முயன்ற தந்தை காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் அம்பாறை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இவ்வனர்த்தம், இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.
மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று விட்டே, தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர், கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த முஹம்மது மிர்சா முஹம்மது கலீல் (வயது 63) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது 29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது 15) ஆகியோர் உயிரிழந்தவர்களாவர். அந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்து விட்டார்.
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே. வீரசிங்க வழிநடத்தலில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…
திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தை…
லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால்…
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல்…