நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த விவசாய அமைச்சு பல்வேறு வேலைத் திட்டங்களைச் செயற்படுத்துவதாகவும், தற்போதும் 10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கீடுகளை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது நாம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாடு. கடந்த காலங்களில் விவசாய துறையும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. தற்போது அந்த நிலைமை மாறியிருக்கிறது. விவசாய அமைச்சும் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த பல வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது. அதனால் நாட்டின் பொருளாதாரமும் விவசாயத் துறையும் முன்பிருந்த நிலையை விடவும் வளர்ச்சியை எட்டியுள்ளன.
விவசாயம் தொடர்பில் அவதானம் செலுத்தும் போது, விவசாயிகளின் அறுவடையின் அளவை அதிகரித்துகொள்ள வேண்டியது மிக முக்கியமானது. பல மாதங்களாக விவசாயிகள் பலத்த மழை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டனர். அதனால் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கும் விவசாயத்தைப் பாதித்தது. எவ்வாறாயினும், தற்போது பெரும்போக விளைச்சலின் போது 3.6 மெட்ரிக் தொன் விளைச்சலைப் பெற்றுகொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. எமது நாட்டின் வருடாந்த அரிசித் தேவை 2.4 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும்.
சில மாகாணங்களில் சிறந்த அறுவடை கிடைக்கிறது. இந்த விளைச்சலுக்காக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் வறட்சி ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதனால் நீரை முடிந்த வரையில் கவனமாக பாவனைச் செய்ய வேண்டியுள்ளது. சிறுபோகத்தில் 512,000 ஹெக்டயாரில் விளைச்சலை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். அதற்காகவும் நீரை கவனமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
அதேபோல் மேலதிக விளைச்சல் குறித்து அக்கறை காண்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது சோளம், கோதுமை, உருளைக் கிழங்கு போன்ற விளைச்சல்களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தை பெரும் பணிகள் சார்ந்துள்ளன.
மேலும், இதுவரை பல புதிய அரிசி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தும் செயற்திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. புதிய அரிசி வகைகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களில்தான் இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.
நெல் விளைச்சலுக்கு மேலதிகமாக, இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் மிளகாய், வெண்டிக்காய், மாதுளை, கோதுமை போன்ற பல புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரின் ஆலோசனைக்கமைய 10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கீடுகளைப் பெற்றுகொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…