இந்தோனேஷியாவின் பாடிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் திடீரென்று தடுமாற்றத்துடன் வானில் பறந்துள்ளது.
ஜகார்தாவுக்கு கடந்த மாதம் 25 ஆம் திகதி பயணித்த பாடிக் ஏர்பிளைட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் 153 பயணிகளும் இரண்டு விமானிகள் மற்றும் 4 விமான பணியாளர்களும் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது வழக்கமான பாதையை விட்டு விலகி சென்றுள்ளது.
இதனால், விமான கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் விமானிகள் இருவரையும் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை.
சுமார் 35 நிமிடங்கள் இந்த பரபரப்பு நீடித்தது. அதன்பிறகு விமானம் வழக்கமான பாதைக்கு வந்து தனது பயணத்தை தொடங்கியது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், குறித்த நேரத்தில் விமானிகள் இருவருமே தூங்கியமை தெரியவந்துள்ளது
குறித்த விமானத்தில் 32 மற்றும் 28 வயது மதிக்கத்தக்க இரண்டு விமானிகள் சேவையில் இருந்துள்ளனர்.
விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் இணை விமானியிடம் கட்டளை விமானி, தனக்கு உறக்கம் அதிகமாக வருவதாக கூறி உறங்கியிருக்கிறார்.
ஆனால், சிறிது நேரத்தில் இணை விமானியும் தன்னை அறியாமல் தூங்கிவிட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை விமானம் சரியான நேரத்தில் வந்து தரையிறங்கியுள்ளது.
எனினும், விமானிகளின் இந்த அஜாக்கிரதையான செயல் விமான பயணிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…
திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தை…
லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால்…
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல்…