யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
தனது மனைவியுடன் காரைநகருக்கு சென்று வீடு திரும்பும்போதே அவர் இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாளுடன் காரில் பயணித்தவர்கள் அவர்களை அச்சுறுத்திய நிலையில் குறித்த இளைஞன் தனது மனைவியுடன் கடற்படை முகாமினுள் சென்று அடைக்கலம் கோரியுள்ளார்.
இந்நிலையில் கடற்படையினர் எமக்கு பிரச்சினை வரும் வெளியேறுமாறு தம்பதியினரை கலைத்துள்ளனர்.
இந்நிலையில் கடற்படை முகாம் முன்னே இளைஞனை ஒரு காரிலும் மனைவியை மற்றுமொரு காரிலும் அச்சுறுத்திய வன்முறைக்கும்பல் கடத்தி சென்ற நிலையில் இளைஞன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வட்டுக்கோட்டை ஆதார வைத்தியசாலையில் சந்தேநபர்களால் இறக்கபட்டடுள்ளார்.
வைத்தியாசாலையில் பணியாற்றியவர்கள் குறித்த நபரை மீட்டு யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
இதேவேளை மனைவி அராலியிலுள்ள வீடொன்றில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அயலவர்களின் எதிர்ப்பினால், சந்தேக நபர்கள் சித்தன்கேணி பகுதியில் குறித்த பெண்ணை இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்
தொடர்ந்து இறந்த நபரின் மனைவியால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் சந்தேகநபர்களில் மூவரை அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பான முன்விரோதம் காரணமாகவே குறித்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…