Categories: Local News

பிள்ளைகளை அடகு வைக்கும் தலைவர்கள் எமக்கு அவசியமில்லை – திலித் ஜயவீர

படைப்பாற்றல் இல்லாத தலைவர்கள் இருக்கின்ற நாட்டின் பிள்ளைகளையும் பிறக்க இருக்கின்ற பிள்ளைகளையும் அடகு வைக்கும் தலைவர்கள் எமக்கு அவசியமில்லை. மானியங்களை நம்பியிருக்க பழக்கும் அரசாங்கத்திற்கு பதிலாக நல்ல நிர்வாகத்தின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தை கட்டியெழுப்பப்பட வேண்டும் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

‘தொழில்முனைவான அரசாங்கத்தின் ஊடாக மகிழ்ச்சிமிகு தேசம்’ என்ற தொனிப்பொருளில் மாத்தறை தி கிராண்ட் நவ்ரோ ஹோட்டலில் இடம்பெற்ற மவ்பிம ஜனதா கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பயனற்ற மக்களை சேர்த்துக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசாங்கம் அடுத்த IMF தவணையை பெற்றுக் கொள்ள பிள்ளைகளின் கெம்பொக்ஸ் பெட்டிகளுக்கும் இன்று VAT அடித்துள்ளது.

இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயில் குடும்பத்தை நடத்தலாம் என்று சொல்லும் முட்டாள்தனமான அரசு இது. கடன் முகாமைத்துவம் என்பது என் வாழ்க்கையின் ஒரு பகுதி. முப்பது வருடங்களாக என் தொழில் துறையில் இருக்கும் ஒன்று.

கடன் முகாமைத்துவத்தை செய்ய வேண்டியது அதற்கான திறமை உள்ளவர்களே அன்றி வெறும் வாய்பேச்சு வீரர்கள் அல்ல. எமக்கு தவறிய சந்தர்ப்பத்தை எண்ணி புலம்பாமல் பாரம்பரிய அரசியல் சாக்கடையில் இருந்து மீண்டு முறையான வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும்.

மகிழ்ச்சியான தேசத்தை கட்டியெழுப்புவதன் மூலம் நாங்கள் செய்ய முயற்சிப்பது என்னவென்றால் பாரம்பரிய அரசியலில் இருந்து மாறுபட்டு சரியான பாதையின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதே. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பாரம்பரிய சிந்தனையின்றி ஒரு மூலோபாய வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாங்கள் அதற்காக ஒரு கலந்துரையாடலுக்கு செல்ல வேண்டி உள்ளது.இன்று உலகில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து வருகிறது. சில காலங்களுக்கு முன்பு சுற்றுலாத்துறையில் நாம் பெற்ற வருமானம் நாற்பது சதவீதம் குறைந்துள்ளது. நம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நிலை காரணமாகவே இவ்வாறு நடந்துள்ளது. நம் நாட்டில் சுற்றுலா துறையை — ஆக மாற்ற வேண்டும். போக நாடு இல்லாமல் இலங்கையை தெரிவு செய்யும் நிலைமை இல்லாமல் சுற்றுலாவிற்காக செல்ல நினைக்கும் ஒரு இடமாக நாங்கள் சுற்றுலா துறையை வளர்ச்சியடைய செய்ய வேண்டும். நாட்டிற்கு டொலர் கிடைக்கும் ஒரு பலம்மிக்க துறையாக. படைப்பாற்றல் இல்லாத தலைவர்கள் இருக்கின்ற நாட்டின் பிள்ளைகளையும் பிறக்க இருக்கின்ற பிள்ளைகளையும் அடகு வைக்கும் தலைவர்கள் எமக்கு அவசியமில்லை. இந் நாட்டிற்கு படைப்பாற்றல் மிக்க தலைவர்களே தேவைப்படுகின்றனர். பழைய விடயங்களை பாரம்பரியமாக செய்யாமல் புதிய விடயங்களை எடுத்து புதிய வழியில் சிந்திக்க கூடியவர்களாகவே நாம் ஒன்றிணைய வேண்டும். இந்த நாட்டை ஆக்கப்பூர்வமாகக் கட்டியெழுப்பும் போது ஏனைய இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளையும் மனவேதனைகளையும் ஏற்படுத்தாமல் செய்ய வேண்டும். இந்த நாட்டில் தேர்தல் வரும்போது எல்லாம் இந்த ​​பிரிவினைகளை உருவாக்கும் முறை​யே பயன்படுத்தப்படுகிறது. அதனூடாக வெற்றிகளை பெறவே அவர்கள் முயற்சி செய்கின்றனர். இனிமேலும் இந்நிலை தொடர இடமளிக்க கூடாது.

அந்த சிகப்பு நிறம் ஊதா நிறமாக மாறுவதற்கு முன்னர், சிகப்பு நிறம் நன்றாக இருந்த காலத்தில் ஐந்து வகுப்புகளுக்கு சென்றவன் நான். மீண்டும் ஒரு முறை இந்த நாட்டை மூன்றாம் உலகத்தில் இருந்து எமலோகத்திற்கு எடுத்து செல்ல முடியாது. திருடர்களை பிடிக்கும் ஊழலற்ற கொள்கைக்கு பதிலாக சரியானதை செய்யும் சரியான பாதைக்காக நாம் ஒன்றிணைய வேண்டும். அதற்கான முயற்சியிலேயே நாங்கள் இருக்கின்றோம். இந்த நாட்டில் இருந்து ஊழல்வாதிகள் எடுத்துச் சென்ற வளங்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அது ஒரு தனி வேலைத்திட்டம். பக்கத்து வீட்டுக்காரனைத் திருடன் என்று வீண் பேச்சு பேசி நாட்டு மக்களை முட்டாளாக்கும் முறை இந்த நாட்டுக்கு இனி தேவையில்லை.இந்நாட்டு மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபடும் தலைவர்கள் ஆடம்பர வாழ்க்கை நடத்தி தம் ஆதரவாளர்களை துன்பத்தில் ஆழ்த்துகின்ற அரசியல் முறையே இந்த ஊதா முறையாகும். எனக்கு அந்த முறை பிடிக்கவில்லை. அதனால் தான் சரியானதை செய்வதற்காக அன்று அதிலிருந்து விலகினேன்.

ஊழல் புதைகுழியில் சிக்கி ஊழல் வேலை செய்வதை விட முறையான திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும். அதற்காக இணையுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் இந்த நாட்டின் நாகரீகம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இழந்த நாகரீகத்தை மீட்டெடுக்க வேண்டும். சிங்கள பௌத்த நாகரீகம் என்பது தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையில் தோன்றிய நாகரீகம். எல்லோரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, துன்பம் இல்லாமல் இருந்தால் ஜாதி, மத வேறுபாடுகள் இருக்க முடியாது என்று நினைத்தோம். அதனால்தான் நாம் ஒரு தொழில் முனைவோர் அரசை உருவாக்க வேண்டும்.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago