அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹொலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் 96-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
‘புவர் திங்ஸ்’ என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.
இதனை பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா வழங்குவதற்காக மேடையில் தோன்றினார்.
அவர் வருவதற்கு முன் நிகழ்ச்சி தொகுப்பாளரான கிம்மல் பார்வையாளர்களை நோக்கி, நிர்வாண மனிதர் ஒருவர் மேடையில் இன்று ஓடி சென்றால் எப்படி இருக்கும் என நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அது பைத்தியக்காரத்தனம்போல் இருக்காது? என கேட்டார்.
அப்போதுஇ மேடையின் ஓரத்தில் இருந்து ஜோன் சீனா நிர்வாண நிலையில் மேடையில் மெல்ல நடந்து வந்தார்.
எனினும்இ அந்தரங்க பாகங்களை மறைத்தபடி மேடையில் மைக் முன்னே நின்று அவர் பேசினார்.
அவர் கிம்மலிடம், என்னுடைய எண்ணங்களை நான் மாற்றி கொண்டேன். மேடையில் நிர்வாண நிலையில் ஓடும் செயலை செய்ய விரும்பவில்லை. அது சரியாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை. இது ஓர் அழகான நிகழ்ச்சி. சிரிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கூறுவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஆண் உடல் ஒன்றும் நகைச்சுவைக்கானது அல்ல என்று பேசினார்.
இந்த விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதுக்கான பெயர் அறிவிப்பை ஜோன் சீனா வெளியிட்டார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…