Categories: Local News

வைத்தியர்கள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தரம் 05 இல் கல்வி கற்கும் சிறுவர்கள் குழுவொன்று போதை மாத்திரையை பாவித்து போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரதூரமான நிலைமை என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,  எந்தவொரு மருந்துப் பொருட்களையும் பிள்ளைகளுக்கு கிடைக்காத வகையில் வீட்டில் சேமித்து வைக்காமல் இருப்பதற்கு பெற்றோர்களும் முதியவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 05 இல் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் போதையை உருவாக்கும் மாத்திரையை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த ஒருவகையான மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய மூன்று மாணவர்களுடன் சேர்த்து அருந்தியதாகவும், பின்னர் ஒவ்வாமை காரணமாக அவர்கள் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு மாத்திரைகளை எடுத்துச் சென்ற சிறுவனின் தந்தை ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் அவர் மீது போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுராகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mohamed Arshad

Recent Posts

ஜனாதிபதியின் யாழ்ப்பாண கூட்டத்திற்கு வேறு மாவட்டங்களிலிருந்து பஸ்களில் ஆட்களை அழைத்து வந்துள்ளதாக விமர்சனம்.

கொழும்பு, நவம்பர் 11 (டெய்லிமிரர்)- ஜனாதிபதி கலந்து கொள்ளும் NPP யின் அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…

1 week ago

திருகோணமலையில் எத்தனை வேட்பாளர்கள் இருந்தாலும் MS தௌபீக் இற்கு மக்களின் பலத்த ஆதரவு…செல்லுமிடம் எங்கும்அமோக வரவேற்பு…

திருகோணமலை மாவட்ட அரசியல் களமானது இம்முறை வழமையவிட அதிக போட்டி நிறைந்தாக காணப்படுவதுடன் அதிகமான வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தை…

1 week ago

மாணிக்கக்கல் வர்த்தகர் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை

லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார்…

1 week ago

பொதுத் தேர்தல்: மை பூசும் விரலில் மாற்றம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…

1 week ago

அனைத்தும் மக்களை ஏமாற்றும் நாடகம்.

இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான் இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால்…

2 weeks ago

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு தான் எங்கள் போராட்டம் ஆரம்பமாகும் என ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல்…

2 weeks ago