ராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்ததுடன், தோப்பின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடல் அட்டை, கஞ்சா, ஏலக்காய், அழகு சாதன பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (16) காலை பனைக்குளம் அடுத்த ஆற்றங்கரை அம்மன் கோயில் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக மெரன் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆற்றங்கரை மெரைன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாரிக் தலைமையிலான மெரைன் பொலிஸார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் இருந்த தோப்பு ஒன்றில் தடை செய்யப்பட்ட சுமார் 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மரைன் பொலிஸார் அந்த தோப்பின் உரிமையாளரான ஜகாருதீன் என்பவரை கைது செய்து கடல் அட்டை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப் பட்ட தளவாட பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட அட்டையின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 5 லட்ச ரூபாய் இருக்கலாம் என மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் இருசக்கர வாகனம், கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட அனைத்தையும் மேலதிக விசாரணைக்காக ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…