இலங்கைக்கான கடந்த காலங்களில் பல இந்திய முதலீடுகளையும், முதலீட்டாளர்களையும் இழந்தமைக்கு ஜே.வி.பியே முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய எதிர்ப்பு கொள்கையை கடந்தகாலங்களில் பின்பற்றிய ஜே.வி.பி.யின் இந்திய விஜயமானது கேள்விகளை தோற்றுவித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”ஜே.வி.பியின் இந்திய விரோத கொள்கைகளின் விளைவாக நாடு எதிர்கொண்ட இழப்பிற்கு சம்பூர் மின் திட்டம் ஒரு உதாரணமாகும்.
எனினும், ஜே.வி.பி. இப்போது வேறு ஒரு பார்வையை அடைந்து, இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளது.
இது ஒரு நல்ல விடயம். அனுர தரப்பின் இந்திய விஜயத்தை தொடர்ந்து, இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களுக்கு அந்த கட்சி ஆதரவளிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி குழுவினர் ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவை சென்றடைந்துள்ளனர்.
இவ்வாறு தூதுக்குழுவினர் புது டெல்லி, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மூன்று நகரங்களுக்குச் செல்லவும், விவசாயம் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கும் மையங்களைப் பார்வையிடுவதோடு, அரசாங்க அதிகாரிகள் மற்றும் வணிக சமூகத்தின் உறுப்பினர்களுடனும் சந்திப்புகளை நடத்த உள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உட்பட பல உயர்மட்ட இந்திய அதிகாரிகளை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…