பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் பணிப்பாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், நியமனத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்க நிதியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆசிரிய உதவியாளர்கள், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் பட்டப்படிப்பை அல்லது ஆசிரிய கலாசாலை கற்கையை பூர்த்தி செய்ததும் நிரந்தர நியமனத்துக்கு உள்வாங்கப்படுவார்கள்..
மேலும் இந்த காலப்பகுதியில் அவர்களுக்கு 20,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மத்திய மாகாணத்தில் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாதுள்ள 125 ஆசிரிய உதவியாளர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் அந்த நியமனம் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் கூறியுள்ளார்.
இதற்கமைய, 2,531 பேருக்கான நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…