கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் ஒன்று கடுவலை கொடெல்ல பிரதேசத்தில் காட்டுப்பகுதியில் வைத்து இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த மோட்டார் வாகனம் முழுவதுமாக தீக்கிரையாகி காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற காரின் இலக்கமான CAO-5345 என்ற இலக்கத்தை கொண்ட வெள்ளை நிற மோட்டார் வாகனமொன்று பாணந்துறை எலுவில பிரதேசத்தில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.
இன்று பிற்பகல் மோட்டார் வாகனமொன்றில் விகாரை வளாகத்திற்குள் நுழைந்த நான்கு சந்தேக நபர்கள் அங்கிருந்த தேரர்களிடம் இங்கு ஜாதகம் பார்க்கும் தேரர் யார் என வினவியுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் என்று கூறி துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றதாக விகாரையின் தேரர் ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கி குண்டுகள் அவரது இடது கை மற்றும் மார்பில் தாக்கியதுடன், காயமடைந்த தேரர் உடனடியாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்து காணப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணக்கத்துக்குரிய கலபலுவாவே தம்மரதன என்ற 44 வயதுடைய தேரரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவராவார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…