முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் வீடு உடைக்கப்பட்டு, 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்டுள்ளன என தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
பத்தரமுல்ல விக்ரமசிங்க புரவில் உள்ள இரண்டு மாடி வீடே உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களில் வீட்டின் அலுமாரியில் இருந்த 1,50,000 ரூபாய் பணம், தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் கைக்கடிகாரம், தங்க முலாம் பூசப்பட்ட சிங்கப்பூர் நாணயங்கள் 8, உலருணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை புத்தகப் பை என்பன உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். .
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் தன்னுடைய கணவனுடன் கொழும்பில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போதே, வீடு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
முன் கண்ணாடிக் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் கணவரான வர்த்தகர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…