இந்த வருடம் மார்ச் மாதம் வரையான ஐயாயிரம் ரூபா வாழ்வாதார கொடுப்பனவுக்கான நிலுவை தொகை அடுத்த வருடம் (2025) ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் இதனை அறிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் 7800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கவும், ஏப்ரல் முதல் அதிகரிப்பை வழங்கவும் முன்மொழியப்பட்ட போதிலும், இம்மாதம் முதல் மார்ச் வரையில் அந்த தொகையில் ஐம்பது சதவீதத்தை வழங்குவதற்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, இம்மாதம் முதல் மார்ச் வரை தலா ஐந்தாயிரம் ரூபாவும், மீதமுள்ள தொகை அடுத்த ஆண்டும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவான 7800 ரூபாவுடன் ஐயாயிரம் ரூபாவை சேர்த்து எதிர்வரும் மார்ச் மாதம் வரை பன்னிரண்டாயிரத்து எண்ணூறு ரூபாவை (12800) செலுத்துமாறும் ஏப்ரல் மாதம் முதல் கொடுப்பனவை பதினேழாயிரத்து எண்ணூறு ரூபாவாக அதிகரிக்குமாறும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, சாதாரண மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு வேலை நாட்களின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…